« Home

அன்பான அனைவருக்கும்,வணக்கம்.இங்கு எனது படைப்புகளை இடும் முதல் முயற்சியாக ஒரு கடவுள்வாழ்த்துப்பாடல்.

"வேண்டும்..."

அறியாது, தெரியாது, பிழை செய்யும் மனது,
நெறியாது, முறையாதென்று அறியாத மனது,
தெளிவான நிலை தேடித் தவிக்கின்ற மனது,
களிப்பானதில் இறையை மறக்கின்ற மனது,
சிந்தனை ஒன்றில்லாது சிதறுகின்ற மனது,
இத்தனையும் கொண்ட பித்தமனம் வேண்டேன்.
உந்தனை மட்டும் நினைக்கும் உயர்ந்த மனம் வேண்டும்,
செந்தமிழில் எந்தனெழில் அரங்கனைப்பாடும்,
அந்த நல்ல மனம் மட்டும் எப்போதும் வேண்டும்!
***************************************

Previous posts